ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்
ஆதிகேசவ பெருமாள் கோவில்
எங்களைப் பற்றி
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்,ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஷட்கோணபுரி என்னும் (ஆறுகோணங்கள், அருந்தமிழ்குன்றம்) அரக்கோணம் நகரின் மையப்பகுதியில் முதன்மையான திருக்கோயிலாக அமைந்துள்ளது.
இந்த திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது.இந்த ஆலயம், 45க்கும் மேற்பட்ட கருங்கல் தூண்களால் ஆன மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீ வைகானஸம் பகவத் சாஸ்திர முறைப்படி நித்ய ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கோவிலின் தெய்வங்கள்
கருவறை
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சன்னதி
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சன்னதி,கிழக்கு திசை நோக்கியவாறு வடக்கு முகமாக மிகவும் பழமைவாய்ந்த மற்றும் முதன்மையான தெய்வமாக அமைந்துள்ளார். இவர் மிகவும் சக்திவாய்ந்த ஆஞ்சநேயராக பக்தர்களால் கருதப்படுகிறார்.
அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு மட்டைத்தேங்காய் முடித்துவைத்து ஒரு மண்டலம் (48 நாள்)கோயிலை வலம் வந்தால் நினைத்தகாரியங்கள் (குழந்தைபாக்கியம், திருமணம், கல்வி, தொழில், கடன் பிரச்சனை, உடல் ஆரோக்கியம், வியாபாரம்) விரைவில் கைகூடும்.
ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் சன்னதி
ஸ்ரீ அம்ருதவல்லி தாயார், தெற்கு திசை நோக்கியவாறு தனி சன்னதியாக,பத்மாசனத்தில் அமர்ந்தகோலத்தில் எழுத்தருளிவுள்ளார். திருக்கடிகை க்ஷேத்ரம் என்னும் சோளிங்கரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்ருதவல்லி தாயாரை மலையேறி சேவிக்கமுடியாத பக்தர்களுக்காக,இந்த ஆலயத்தில் அதே தாயாரை நம் பெரியோர்கள் எளிதில் சேவிக்கும்படியாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதி
ஸ்ரீதேவி பூதேவியருடன்,ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தெற்கு திசை நோக்கியவாறு திருநின்ற கோலத்தில் சங்கு,சக்ர,கதா அபய அஸ்தத்துடன் அச்சாவதார ரூபமாய் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.பக்தர்கள் வேண்டும் வரத்தை அள்ளித்தரும் வரதனாய் அமைந்துள்ளார்.
ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி
பெருமாளுக்கு நேர் ஏதிராக சன்னதி கொண்ட பெரியதிருவடி என்னும் ஸ்ரீகருட பகவான் கைகூப்பிக்கொண்டு பக்த அரூபமாய் எழுந்தருளி உள்ளார்.
ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார் சன்னதி
இந்த திருக்கோயிலில் உள்ள விநாயகர்,கிழக்கு திசை நோக்கியவாறு பச்சைக்கல் வலம்புரியுடன்,திருநாமம் சாத்திக்கொண்டு தும்பிக்கை ஆழ்வார் சொரூபமாய் எழுந்தருளிவுள்ளார். இவ்விநாயகர், அரசமரம் மற்றும நாககற்கள் சேர்ந்து அமைந்துள்ளதால் இவை மூன்றையும் சேர்த்து வலம்வருவதால் அனைத்து காரியங்களும் வெற்றி நிச்சயமாக கிட்டும் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷமான உண்மை.
குழந்தை பாக்கியம் பெறவேண்டும் என்பவர்கள் இந்த ஸ்தலத்தில் இந்த மூன்று தெய்வங்களையும் காலை (5.30-6.30AM) மணிக்குள் ஒரு மண்டலத்திற்கு(48 நாள்) கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து வலம்வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் பெறலாம்.
சிறப்பம்சங்கள்
ஸ்தல விருட்ஷம்
திரிமூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்),அரூபமாய் 100 வருடங்கள் பழமைவாய்ந்த மரம். விருட்ஷங்களுக்கே அரசனாக திகழும் அரசமரம் மிக விசாலமாக எழுந்தருளியுள்ளது.இம் மரத்தின் அடியில் நாக கற்கள் மற்றும் விநாயகர் சேர்ந்து அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.
கிணறு
இக்கோயிலில் சுமார் 800 வருடங்கள் பழமைவாய்ந்த கிணற்றின் நீர் சுத்த தீர்த்தமாகும்..இக்கிணறு 800 வருடங்கள் ஆகியும் இன்றுவரை வற்றாத தீர்த்தமாக அமைந்துள்ளது. பெருமாளின் அவதாரத்தின் சொரூபமாய் கூர்மம் எழுந்தருளியிருப்பது இக்கிணற்றின் தனிச்சிறப்பு.
மடப்பள்ளி
இக்கோயிலில் பெருமாளுக்கு அமுதம் செய்யும் பிரசாதங்கள் அனைத்தும் மடப்பள்ளியில் செய்தவை மட்டுமே. வெளியில் இருந்து கொண்டுவரப்படும் பிரசாதங்கள் மற்றும் இனிப்புவகைகள் ஆகியவற்றை நெய்வேத்தியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கோவிலுக்குள் விநியோகம் செய்யவும் அனுமதி இல்லை. பெருமாளுக்கு நெய்வேத்தியத்திற்கு உகந்தவை: தேங்காய், விஷேச பழங்கள், கற்கண்டு, அவல், பேரிச்சம்பழம், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, வெற்றிலை, களிப்பாக்கு.
கோவில் நேரம்
நாட்கள் | காலை | மாலை |
---|---|---|
ஞாயிறு | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
திங்கட்கிழமை | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
செவ்வாய் | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
புதன் | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
வியாழன் | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
வெள்ளிக்கிழமை | 07.00AM to 11.00AM | 06.00PM to 08.00PM |
சனிக்கிழமை | 07.00AM to 12.00AM | 06.00PM to 09.00PM |
தொண்டர்கள்
Contact
Address
Old Bazaar St, Arakkonam, Tamil Nadu 631001